by Vignesh Perumal on | 2025-06-30 02:37 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரிலும், புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையிலும், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் ஒன்று முதல் ஐந்து நுழைவுப் பகுதிகள் வரையில் பேரிகார்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இரண்டு பகுதிகளில் பெரிய பேரிகார்டுகள் அமைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தற்கொலை முயற்சிகளைத் தடுத்து, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!