by admin on | 2025-06-30 05:50 AM
பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளை (பதிவு எண் 154/2024) சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிதி கேடயம் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தேனி மாவட்ட சமுதாய சங்கத்தின் தலைவர்களை கௌரவிக்கும் விழா
பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளை சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிதி கேடயம் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தேனி மாவட்ட சமுதாய சங்கத்தின் தலைவர்களை கௌரவிக்கும் விழா பிரம்மாண்டமான வகையில் தேனி மாவட்டம் வீரபாண்டி வேளாளர் உறவின்முறை சங்கத் திருமண மண்டபத்தில் 14-06-2025 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் இரண்டு மணி வரை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் தலைவர் செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளையின் வழிகாட்டுதல் குழு மற்றும் புரவலர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை (CRT) மற்றும் BLB ESTATES PVT LTD சேர்மன் திரு ஆர் பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்கள் மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தாய் தந்தை இழந்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க மற்றும் கலை இயல் கல்லூரிகளில் படிக்க 30 படிவம் நல அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளார். நல அறக்கட்டளை தகுதியான 30 ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவ்வாறு பரிந்துரை செய்யும் படிவங்களுக்கு தலா முப்பதாயிரம் ரூபாய் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தலா இருபதாயிரம் ரூபாய் கலை இயல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்தார். வருடத்திற்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை சமுதாய மாணவர்களின் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் என்ற அறிவித்த நிகழ்ச்சி தேனி மாவட்ட சமுதாய மக்களின் பலரில் வயிற்றில் பாலை வார்த்தது என்றால் அது மிகையாகாது. தற்போதைய காலங்களில் உதவுவதே அதிசயம் என்ற சூழ்நிலையில் இது போன்ற மகத்தான செயலை எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக மனிதர்கள் செய்ய முடியும் என்றால் அது கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளையின் தலைவர் திரு பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் கூறுகையில் இறைவன் என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி ஏழை எளியவருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வைக்கின்றார் என்று கூறினார் ."அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" என்ற குரலுக்கு ஏற்ப வாழும் சிறந்த நல்ல தலைமை பண்புள்ள மனிதர் என்பதை நமது நல அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்தி வணங்குகின்றோம்.
பிள்ளைமார் நல கட்டளை மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கங்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க நல அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் பொறுப்பையும் ஏற்று அறக்கட்டளைக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் விதமாக பொறுப்பை ஏற்றுக் கொண்டது அனைவராலும் போற்றி பாராட்டப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலா பாண்டியன் கல்வி குழுமங்களின் தலைவர் திரு கலா பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் ஒரு லட்சம் கல்வி நிதியாக ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கினார். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கும் தலா ஒரு வைர மோதிரம் பரிசளித்தார். மாவட்டமே வியந்து பாராட்டியது என்றால் அது மிகையல்ல. தங்கம் விற்கும் விலையில் வாங்குவதற்கே கவலைப்படும் சராசரி குடும்பத்தினர்களுக்கு மத்தியில் வைர மோதிரம் பரிசளித்து கௌரவித்தது மிகச்சிறந்த செயல் மட்டுமல்ல மற்றவர்களுக்கு பணத்தின் மதிப்பை விட மாணவர்களை மேம்படுத்த வேண்டும்,அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற தலைமை பண்பை திரு கலா பாண்டியன் அவர்களிடம் காண முடிந்தது என்றால் அது மிகையாகாது. மாவட்ட அளவில் பல உதவிகள் அனைவருக்கும் செய்து வந்தாலும் சட்டம், காவல் பிரச்சனை அனைத்து பிரச்சனைகளுக்கும் நியாயமான தீர்வு காண போராடக் கூடிய மனிதர், நல அறக்கட்டளையின் கௌரவத் தலைவராக இருந்து எங்களை வழி நடத்துவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கவும் உறுதி செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயக் கல்வி, பாரா மெடிக்கல் கல்விகள் கல்லூரியில் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் கேடயம் மற்றும் பொற்கிழியை பெற்றுக் கொண்டனர். நல அறக்கட்டளையின் சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தலா ரூபாய் 10,000 இரண்டாம் மதிப்பெண் பெற்றவருக்கு தலா ரூபாய் 7000 மூன்றாம் மதிப்பு பெற்றவருக்கு தலா ரூபாய் 5000 என வழங்கப்பட்டது. 190 மாணவர்களுக்கு மேல் ஒவ்வொருவருக்கும் பொற்கிழியாக ரூபாய் 2000/- பாராட்டுச் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் மாணவிகளும் தங்களது குடும்பத்தினருடன் மேடைக்கு வந்து பரிசு பொருளை பெற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய தாய் தந்தை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிறுவனத் தலைவர் திரு MSS காந்தவாசன் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார் மேலும் பணம் கணக்கு பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து இக்கூட்டத்தை நடைபெற அரும்பாடுபட்டார். பலரை புரவலராக ஆக்கிய பெருமை நிறுவனத் தலைவர் அவர்களை சாரும். வருடம் தோறும் மாவட்ட அளவில் ஏன் விரைவில் மாநில அளவில் கூட சமுதாய மாணவ மாணவர்களுக்கு மேம்படுத்த நல அறக்கட்டளை பாடுபடும் என தெரிவித்தார். திருமதி சுகன்யா காந்தவாசன் அவர்கள் செயலாளர் நாகமணி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்ததுடன் சமுதாயப் பெண்களை ஒருங்கிணைத்து மாவட்டத்தில் மிகப்பெரிய ஆற்றல் சக்தியாக மாற்றுவேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு போடி N ரவி பிள்ளை அவர்கள், தலைவர்களின் ஒத்துழைப்பு ஏன் அவசியம் என தெளிவாக எடுத்துரைத்தார் குறிப்பாக தலைவராக இருந்து சங்கத்தை வழிநடத்தி சாதனையாளராக திகழ்பவர்கள் பலர், சாதனையாக தலைவராக அமைந்து கொண்டு சங்கத்தை வழி நடத்துபவர்கள் சிலர், இந்நிலை மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார் தலைவர் முக்கிய பொறுப்பு ஏற்பவர்கள் செயல்படாவிட்டால் பொறுப்பு இருக்கும் அமைப்பு பெயரளவுக்கு இருக்கும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கல்வியின் அவசியத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமுதாயம் பின்தங்கியதற்கு சமுதாய மக்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து தனிமரம் தோப்பாகாது என்பதையும் உணர்ந்து ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தந்தால் மட்டும்தான் சமுதாயம் மேம்படும் சமுதாய மக்கள் மேம்படுவார்கள் என எடுத்துரைத்தார்.
மாவட்டச் செயலாளர் திரு E சன்னாசி பிள்ளை அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டையும், 15 வருடங்களுக்கு மேலாக மாவட்ட அளவில் சமுதாய மக்களுக்கு ஆற்றிய பணியையும் மேலும் தனது வாழ்நாளில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு ஆற்றிய பணியை பாராட்டும் வகையிலும், வாருங்கள் வாழப்பழகுவோம் என்ற நூலை இயற்றி எழுத்தாளர்கள் வரிசையில் நமது இனத்தில் ஒருவர் தோன்றி இருப்பதை பாராட்டும் வகையிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது முதன்முதலாக தேனி மாவட்டத்தில் திரு E சன்னாசி பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை நல அறக்கட்டளை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.துணைத் தலைவர் திரு PS நடராஜன் அவர்கள், கேகே பட்டி திரு குமரேசன் அவர்கள், ஆண்டிபட்டி முன்னாள் ராணுவ அதிகாரி திரு லட்சுமணன் அவர்கள் திரு T பாரதியார் அவர்கள் மற்றும் திரு ஹரிகாந்த் அவர்கள் நிகழ்ச்சி நடைபெற அரும்பாடு பட்டனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி நல அறக்கட்டளையின் பொருளாளர் திரு கனகராஜ் அவர்கள் தனது நிலத்தின் ஒரு பகுதியை உப்பார்பட்டி வேளாளர் உறவின்முறை சங்கத்திற்கு கட்டிடம் தேவை என்பதை உணர்ந்தும், திருமண மண்டபம் உருவாக்க வேண்டும் என்ற வகையிலும் நிலத்தை தானமாக வழங்கியதை பாராட்டி கௌரவிக்கப்பட்டது. கல்வி பொறுப்பை ஏற்று மாணவ மாணவியர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காரணமாக அமைந்த இணைச் செயலாளர் திரு P வெங்கடேஷ் அவர்களுக்கும், கம்பம் யோகா ராஜேந்திரன் அவர்களுக்கும் கம்பம் யோகா ரவி ராம் அவர்களுக்கும், சின்னமனூர் திரு NMS கண்ணன் அவர்களுக்கும், போடி திரு முத்து காமாட்சி அவர்களுக்கும், NAMHSS ஆசியப் பெருந்தகை அனைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற குறிப்பிடத்தக்கவர்கள் மேலே கண்டவர்கள் என்பதை அமைப்பு நன்றி கூறி பாராட்டுகிறது.
3
கோம்பை வேளாளப் பெருமக்கள் உறவின்முறை சங்கத் தலைவர் திரு M பிரபு அவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி பொருளாளர் M பாண்டியன் அவர்கள், சின்னமனூர் தலைவர் G ராமராஜ் அவர்கள் மற்றும் M முத்துமணி அவர்கள், வேலப்பர் வேளாளர் சங்கத் தலைவர் திரு MSS காந்தவாசன் அவர்கள் செயலாளர் திரு A சந்தானகுமார் அவர்கள் பொருளாளர் N சோமசுந்தரம் அவர்கள், குள்ளப்ப கவுண்டன்பட்டி வேளாளர் சங்கத் தலைவர் K முத்துச்சடையன் அவர்கள் மற்றும் செயலாளர் கைலாசபதி அவர்கள், சின்னமனூர் சங்கு கருப்பனபிள்ளை உறவின்முறை சங்கத் தலைவர் திரு T இருளப்பபிள்ளை அவர்கள் செயலாளர் திரு E பாண்டியராஜன் அவர்கள் பொருளாளர் திரு R பாண்டிராஜ் அவர்கள், காமக் கவுண்டன்பட்டி வேளாளர் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு R சுருளிச்சாமி அவர்கள் செயலாளர் திரு S பரமேஸ்வரன் அவர்கள் பொருளாளர் திரு K மணிவண்ணன் அவர்கள், மார்க்கையன்கோட்டை வேளாளர் பெருமக்கள் சங்கத்தின் நிர்வாகிகள் திரு R பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் M வைரமுத்து அவர்கள், கம்பம் வ உ சி பேரவை தலைவர் வழக்கறிஞர் திரு TKN திருமலை சங்கர் அவர்கள், சின்னமனூர் வ உ சி பேரவை துணைத் தலைவர் திரு S சாமுண்டி அவர்கள், உத்தமபாளையம் வேளாளர் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு R முத்து விநாயகம் அவர்கள், கூடலூர் வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு MK முத்தையா பிள்ளை அவர்கள் மற்றும் செயலாளர் திரு S பழனிவேல் பிள்ளை அவர்கள், கம்பம் கம்பராய பெருமாள் வேளாளப் பெருமக்கள் சங்க தலைவர் திரு R மணிகண்டன் அவர்கள் செயலாளர் திரு V கணேசன் அவர்கள் பொருளாளர் திரு M முருகேசன் அவர்கள், கம்பம் புதுப்பட்டி வேளாளப் பெருமக்கள் தலைவர் திரு CK முருகன் அவர்கள், சின்னமனூர் வெள்ளையப்ப பிள்ளை உறவின்முறை சங்கத்தலைவர் திரு K கண்ணன் அவர்கள் செயலாளர் திரு S ஆறுமுகம் அவர்கள் பொருளாளர் திரு M முருகன் அவர்கள், போடி மெட்டு வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு R கோபால் அவர்கள் பொருளாளர் திரு M ஜெய வீரபாண்டியன் அவர்கள், பூதிபுரம் சேனைத்தலைவர் சங்க பொறுப்பாளர் திரு R ராமராஜ் அவர்கள், போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் முன்னாள் காவல்துறை அதிகாரி திரு SP ராஜப்பன் அவர்கள் செயலாளர் திரு G ராஜாங்கம் அவர்கள், வ உ சி கல்வி அறக்கட்டளை மீனாட்சிபுரம் தலைவர் திரு S மாரியப்பன் முன்னாள் Executive Officer, செயலாளர் வழக்கறிஞர் திரு S பால்பாண்டி நண்பர்கள் பொருளாளர் திரு S பாண்டியன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கூழையனூர் வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு R கார்த்திகேயன் அவர்கள், சிலமலை பாண்டிய குல வேளாளர் சங்க பொறுப்பாளர் திரு K குருநாதன் அவர்கள், ஆண்டிபட்டி மேலாளபெருமக்கள் சங்கத் தலைவர் திரு மி முருகேசன் அவர்கள் மற்றும் செயலாளர் திரு RS பாலமுருகன் அவர்கள், T சுப்புலாபுரம் இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் திரு M K முருகன் அவர்கள் செயலாளர் திரு T பாலுசாமி அவர்கள் பொருளாளர் திரு ST பாலமுருகன் அவர்கள், பழனி செட்டிபட்டி வேளாளப் பெருமக்கள் சங்க நிர்வாகி திரு N கோபாலகிருஷ்ணன் அவர்கள், சில்வார்பட்டி வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் திரு R பாலசுப்பிரமணி அவர்கள் செயலாளர் திரு சிதம்பரம் அவர்கள் பொருளாளர் திரு ஆறுமுகம் அவர்கள் மற்றும் வ உ சி பேரவை தலைவர் திரு ராமர் அவர்கள், தாமரைக் குளம் வேளாளர் உறவின்முறை சங்க பொறுப்பாளர் திரு C ராஜேந்திரன் அவர்கள், வயல் பட்டி வேளாளர் பெருமக்கள் தலைவர் திரு M காமுத்துரை அவர்கள், p உப்புக்கோட்டை வேளாளப் பெருமக்கள் சங்க தலைவர் திரு N வரதராஜன் அவர்கள் செயலாளர் திரு J சந்தன மூர்த்தி அவர்கள், மேல்மங்கலம் வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் திரு P மாரிசாமி அவர்கள் செயலாளர் திரு K பாண்டியராஜ் அவர்கள் பொருளாளர் திரு S வேலுச்சாமி அவர்கள் மற்றும் மத்திய சங்க முக்கிய பொறுப்பாளர் திரு ராஜேந்திரன் அவர்கள், தேவதானப்பட்டி வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் திரு AS அருணா சேகர் அவர்கள் செயலாளர் திரு S முத்தையா பிள்ளை அவர்கள் பொருளாளர் திரு K காந்தி அவர்கள், வீரபாண்டி வேளாளப் பெருமக்கள் உறவின்முறை சங்கத் தலைவர் திரு R V மாரிச்சாமி பிள்ளை அவர்கள் செயலாளர் திரு R காமுத்துரை அவர்கள், கோடாங்கி பட்டி வேளாளப் பெருமக்கள் உறவின் முறை சங்கத் தலைவர் திரு KA பாண்டியன் அவர்கள் செயலாளர் திரு R நாகலிங்கம் அவர்கள் பொருளாளர் செல்லதுரை அவர்கள், G கல்லுப்பட்டி வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு ET முருகன் அவர்கள், சீலையம்பட்டி வேளாளப் பெருமக்கள் சங்கத் தலைவர் திரு.N சுப்ரமணி ராஜா அவர்கள் செயலாளர் திரு V குருசாமி அவர்கள் பொருளாளர் திரு K சொக்கலிங்கம் அவர்கள், உப்பார் பட்டி வேளாளப் பெருமக்கள் சங்க தலைவர் திரு மாரிமுத்து அவர்கள் மற்றும் செயலாளர் திரு M முத்து பாலாஜி அவர்கள், குள்ளபுரம் வேளாளப் பெருமக்கள் சங்க தலைவர் திரு கண்ணாயிரம் அவர்கள் செயலாளர் திரு R செல்வம் அவர்கள் பொருளாளர் திரு மாணிக்கம் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் திருமலை வெங்கடேசன் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளையின் சார்பாக கீழே கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :-
1. கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஈடு இணை இல்லாத தலைவர் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலையை மெரினா கடற்கரையில் நிறுவ வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.
2. வேளாளர் சமுதாயத்தில் சமுதாய அடிப்படையில் முற்பட்ட வகுப்பினரை சார்ந்தாலும், தற்போதைய காலத்தில் மிகவும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை மனதில் கொண்டு பத்து புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வெள்ளாளர் சமுதாயத்திற்கு பிள்ளைமார் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் மேலும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக நான்கு சதவீதம் முற்பட்ட வெள்ளாளர் பிள்ளைமாறு வகுப்பினருக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
3. தமிழகம் முழுவதும் முதலியார் பிள்ளைமார் என இரு பட்டங்களில் வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழகத்தில் இருந்து வருகின்றனர், தமிழக மாநிலக் கட்சிகளை உருவாக்க முக்கிய பங்கு ஆற்றிய சமுதாயமாகும் தற்போது அரசியலில் உரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினராக சமுதாய மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. அனைத்தும் மாவட்டங்களின் வளர்ச்சி தான் தமிழகம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் தேனி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உரிய வாய்ப்பு இல்லை என்பதையும் தொழில்கள் மாவட்டத்தில் வளர்ச்சி அடைய அரசு தொழில் மையங்களை உருவாக்கி மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
5. மூன்று முதலமைச்சர்கள் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை வழங்கிய மாவட்டம் தேனி மாவட்டம் ஆகையால் தேனி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் சட்ட மன்ற உறுப்பினர்களை அமைச்சராக வாய்ப்பு தர வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இங்ஙனம்,
E சன்னாசி பிள்ளை மாவட்டச் செயலாளர் பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளை
(154/2024) தேனி மாவட்டம்
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !