by admin on | 2025-06-29 09:32 PM
தமிழகத்தில் மட்டுமல்லாமல், தேனி மாவட்டத்தில், குறிப்பாக, போடிநாயக்கனூர் டி.எஸ்.பி. முகாம் அலுவலக கட்டுப்பாட்டில், தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியினை துரிதப்படுத்திடவும், சாலை விபத்துகள் நடைபெறுகின்ற சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றிடவும், உள்ளிட்ட சில காரணஸகளுக்காக, தேசிய நெடுஞ்சாலை ரோந்துபணி (High Way Patrol) வாகனங்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவருடன், காவலர் ஒருவர் ஓட்டுநராக பணிபுரியும் வகையில், இயக்கப்படுகிறது. ஆனால், தற்போது வெளிமாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள், உள்ளூர் சரக்கு வாகனங்கள், டிப்பர், டிராக்டர் வண்டிகளை வழிமறித்து, 24 x 7 நேரமும் ஓய்வின்றி, கேப்பாரின்றி, மாமூல் வசூல் வேட்டையில் தொடர்வதாகவும், கண்ணியமிக்க காவல்துறையின் மாண்பை குறைத்திடும் வகையிலும், அவப்பெயர் ஏற்படுத்திடும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரும், களங்கமும், ஏற்படும் வகையிலும் தொடர்ந்து செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்டோரும், சமூக ஆர்வலர்களும் புலம்பித் தவிக்கின்றனர்.* *தமிழ்நாடு அரசும், தேனி மாவட்ட ஆட்சித்துறை நிர்வாகமும், தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகமும், தேனி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை நிர்வாகமும், மேற்படி தேசிய நெடுஞசாலை ரோந்து (TN 60 G 0353) வாகனத்தை கள ஆய்வு செய்திடவும், மேற்படி வாகனத்தில் ஆய்வு செய்திடவும், ரோந்துப்பணி என்ற பெயரில், அரசுப் பணியில் பயணித்து, தமிழ்நாடு அரசின் காவல் நிலையாணைகளையும், விதிமுறைகளையும் கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக, தங்களது சொந்த விருப்பத்தின் பேரில், செயல்படுவதாக கூறப்படுகின்ற, மேற்படியார்கள் மீது துரித நடவடிக்கை எடுத்திடவும், மேற்படியார்களால் கம்பீர காவல்துறைக்கு ஏற்படுகின்ற களங்கத்தையும், அவப்பெயரையும், போக்கிட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். தேனி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் துரித நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், கருத்தாகவும் இருக்கிறது.
தி. முத்துக்காமாட்சி வெளியீட்டாளர் எவிடன்ஸ் மற்றும்
மாவட்டத் தலைவர் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் தேனி. 9842337244
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!