by admin on | 2025-06-29 09:18 PM
கூடலூர் மெயின் பஜார் வீதி பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு: டாஸ்மாக் கடைகள் உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் நகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் மெயின் பஜார் வீதி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் வழியாக இருந்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாது, பள்ளி செல்லும் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாள்தோறும் பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது* .
இந்த மதுபானக் கடைகள் அருகே கூட்டம் அதிகம் திரளுவதால் சாலை முழுவதும் நிரம்பி நடக்க வழி இல்லாமல் போகின்றது. மதுபான கடைகளில் இருந்து வெளியே வரும் நபர்களின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பள்ளி நேரங்களில் மாணவர்கள் இந்த பாதையில் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்கள் அதிக அளவில் கவலைப்படுகின்றனர்* .
பல்வேறு சமயங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் நடப்பதற்கே இடம் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இப்பகுதியில் பெண்கள் தனியாக செல்லுவதற்கே தயக்கம் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது* . இது மாணவர்களின் கல்விப் பயணத்தையும் நேரடியாக பாதிக்கும் நிலையில் உள்ளது* .
இதனை கருத்தில் கொண்டு கூடலூர் மெயின் பஜார் வீதியில் இயங்கி வரும் இந்த இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மக்கள் அதிக மக்கள் கூடிய இடத்திலிருந்து தூரம் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மக்கள் தரப்பில் இருந்து பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்* .
அதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது நாளாந்த செயல்பாடுகளை எந்த தடையுமின்றி நடத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
எனவே பள்ளி கல்லூரி வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள டாஸ்மார்க் மற்றும் மனமகில் மன்றங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் மற்றும் மாவட்டத் தலைவர் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் தேனி. 9842337244
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!