by admin on | 2025-06-29 11:17 AM
*கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்: கூடுதலாக 3 தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு*
தமிழகம் முழுவதும் ஜூலை 15ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் இந்த முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ஜூலை மாதம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததுகாலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசு துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களை சேர்ந்த பெண்களும், தகுதியானவர்கள் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.முத்துக்காமாட்சி எடிட்டர். 9842337244
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!