by admin on | 2025-02-17 04:59 PM
ட்ரசரியில் சைடுல 500 ரூபாய் கொடுத்தால் பத்திரம் உடனே கிடைக்குதாம். இத நாங்க சொல்லல, ரூபா நோட்டுல இருக்குற காந்தியே சொல்றாரு..!
உத்தமபாளையம்கருவூலத்தைப் பொறுத்தவரையில் கூடலூர்,கம்பம்,உத்தமபாளையம், தேவாரம் மற்றும் சின்னமனூர் உள்ளிட்ட நகரமும் இந்த நகரங்களை சுற்றி உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி வாழ் மக்களும் இந்த உத்தமபாளையம் கருவூலத்தில் கொடுக்கப்படும் பத்திரங்களை வாங்கித்தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் அவ்வப்போது நெட்வொர்க், கணினி, பணியாட்கள் விடுமுறை என அலுவலக ஊழியர்களால் ஏற்படுத்தப்படும் செயற்கையான 100 ரூபாய் பத்திர தட்டுப்பாட்டால் 05 நகரங்களும், நகரங்களைச் சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி வாழ் மக்களும் தமிழ்நாடு அரசு மின்வாரியம், நகை ரசீது, வங்கிகள், அட்வகேட் அபிடவுட், அக்ரிமென்ட்ஸ் உள்ளிட்ட பல விடயங்களுக்காக அனுதினமும் அப்பாவி பொதுமக்கள் செயற்கையான பத்திர தட்டுப்பாட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஏற்கனவே, நடைமுறையில் இருந்த 20 மற்றும் 50 ரூபாய் பத்திரங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.அது சமயம், பொதுமக்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு, உத்தமபாளையத்தில் செயற்கையாக உருவாக்கி வைத்துள்ள 100 ரூபாய் பத்திர தட்டுப்பாட்டை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் மாவட்ட பத்திரப் பதிவாளர், பத்திரப்பதிவு இணை இயக்குநர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.100 ரூபாய் பத்திரத் தட்டுப்பாடு அது இயற்கையா ? செயற்கையா ? என நமக்கு கிடைத்த தகவலை வைத்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல ATO அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை கேட்போம் என 7339290150 என்ற அவரது அலைபேசி எண்ணிற்கு பிப்.17 இன்று 10:27 மு.ப., அழைத்தோம். வாட்ஸப்பிலும் குறுந்தகவல் அனுப்பி இருந்தோம்.
மத்திய மந்திரியுடன் மீட்டிங்கில் இருந்திருப்பார் போல நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.தேனி மாவட்டத்தில் மக்களது வரிப்பணத்தை எடுத்து அரசு அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்திட வேண்டி கொடுக்கப்பட்ட அரசின் CUG அலைபேசி எண்கள் 92% இதே நிலையில் தான் இருந்து வருகின்றன.
ஒருசில அரசு அதிகாரிகள் ஒன்றிற்கு மூன்று அலைபேசிகள், நான்கைந்து சிம் கார்டுகள் வைத்திருக்கிறார்கள்.தங்களுக்கு தேவையானவர்களை அழைக்க வேண்டும் என்றாலும், தேவைப்படுபவர்கள் தம்மை தொடர்பு கொண்டாலும் உடனே எடுத்து மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.ஆனால், மக்களது வரிப்பணத்தில் மக்களுக்கு வேலை செய்திட கொடுக்கப்பட்ட CUG அலைபேசி எண்களை எவரும் மதிப்பதும் இல்லை எடுப்பதும், எடுத்துப் பேசுவதும் இல்லை. அரசு துறையில் பல வருடங்களாய் அரங்கேறும் இந்த அவல நிலை புதிதாக மாவட்ட பொறுப்பிற்கு ஆட்சியர் வந்து விட்டார். இருப்பினும், இந்த நிலை எப்போது மாறுமோ..!?என மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
செய்தி வழங்கியவர்
தேனி மாவட்ட நிருபர் & மக்கள் அதிகாரம்/சட்ட தமிழ் மாத இதழ்களின் இணை ஆசிரியர் & தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் & நவம்பர் 1 மக்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர்- வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்.*_
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!