by admin on | 2025-06-27 11:41 AM
மேல்மங்கலம் கிராமத்தில் தெருக்களில் வீடுகளின் முன்பாக தடுப்புகள் மற்றும் வேலைகளை அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவில் வசித்து வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் வீடுகளில் முன்பாக தெருக்களி தடுப்புகளை ஏற்படுவதையும்வேலி அமைத்துத்துள்ளனர்.
இதனால் வீட்டு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் அவ்வழியாக செல்ல முடியவில்லை. இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆசிரியர்களிடம் சென்று வேலியை அகற்றுங்கள் என்று கூறியுள்ளனர்.ஆனால் ஆசிரியர்கள் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர் ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.எனவே பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.
தி முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்.9842337244