by admin on | 2025-02-17 03:39 PM
திருப்பரங்குறம் மலையின் மீதுவிரும்பத்தகாதசம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும். -இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் ஆகியோர் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுடன்சுவாமிதரிசனம்செய்தனர். கோவிலில் இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
நீண்ட நாட்களுக்கு பிறகுதிருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரைதமிழக முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. அந்தயாத்திரையின் ஒருபகுதியாக அறுபடை நான்வீடுகளுக்கும் வந்திருந்தேன்முதல் படை வீடாக இன்று இந்த முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து விட்டு நானும் காடேஸ்வர சுப்ரமணி அவர்களும் வந்திருக்கிறோம்.இதைதொடர்ந்து மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும்தரிசிக்க உள்ளோம்.*
சமீபகாலமாக இந்து மக்களை பல சைவவழிபாடு செய்கின்ற இந்தப் பகுதியில் விரும்பத்தகாதசம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931 இல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையும் 33 செண்டை தவிர மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம்என்றுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக 1983 ல் வருவாய் ஆவணங்களில் இருந்த பதிவுகளில் தமிழ்நாடு அரசாங்கம் சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். 30 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றுசொல்லிவருகிறார்கள். 1994 தீர்ப்பின் படி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில்கார்த்திகை தீபம் ஏற்றமுன்வர வேண்டும். உலகெங்கும் முருகப்பெருமானே வழிபடுகின்ற பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையைவைக்கின்றேன்.உடனடியாக இந்து அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம்ஏற்றுவதற்குஅனைத்துநடவடிக்கையும்மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோவில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி, மதுரவீரன் போன்றசாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால் அது கிராமங்களில் உள்ளகாவல்தெய்வங்களை போற்றுவதற்குபலியிடுவது வழக்கம். எந்த ஒருமுருகப்பெருமான் இருக்கின்ற சைவ,வைணவ தளங்களில் வெளியிடுவதஎன்கிற சம்பவம்கிடையாது. அப்படி இருக்கும்போதுதிருப்பரங்குன்றம்மலையின் மீது விரும்பத்தகாதசம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று சொன்னதற்கு எங்கள் தலைவர்கள் எல்லாம்அவர்கள்வீட்டிலேயே கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும்.
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்இந்து முன்னணி சார்பாகமாநிலத் தலைவர் போராடிக் கொண்டே இருக்கிறோம் நமது உரிமை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கல்வி கொள்கை ஒரு நாளில் கொண்டு வந்தது அல்ல 40ஆண்டுகளுக்குபிறகுஇன்றையகாலகட்டத்திற்கு உலக அளவில் உள்ள சண்டை நிலவரத்தை வைத்து நாம் போட்டி போடும்அளவிற்குநமது இளைஞர்களை தயார் செய்வதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதே போல புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிகளைஊக்குவிப்பதற்கும் மாணவர்களின்பங்களிப்பைஅதில்கொடுப்பதற்காக ஊக்குவிப்பது தான். இந்த தேசியகல்விக் கொள்கை. தாய்மொழியை புதிய தேசியக்கல்விக் கொள்கை தாய்மொழியைஊக்குவிக்கின்றகல்விக் கொள்கை. தாய்மொழியில்தான்குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை.என்று கூறினார்.
நிருபர். பாஸ்கரன் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!