| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

அர்ச்சகர்கள் ஆபாச நடனம் - ஆன்மீகவாதிகள் அதிர்ச்சி - அதிரடி சஸ்பெண்ட் - அலசி தேடும் போலீசார் :

by Satheesh on | 2025-06-26 04:18 PM

Share:


அர்ச்சகர்கள் ஆபாச நடனம் - ஆன்மீகவாதிகள் அதிர்ச்சி - அதிரடி சஸ்பெண்ட்  - அலசி தேடும் போலீசார்  :

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் அர்ச்சகர் உட்பட 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை, அர்ச்சகர்கள் ஆபாசமாக ஆடும் வீடியோ வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை நீக்கி கோயில் விவகாரத்தில் தலையிட தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் மதுபோதையில் அறை நிர்வாணத்தில் ஆபாச நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றி கடனை செலுதுவது வழக்கம். மேலும் முக்கிய நாட்களில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடத்துவது மட்டுமின்றி தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது கோமதி விநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சர்க்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் வைத்து அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘ஜூன் 15-ந் தேதி பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணி செய்தது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் செயல் அலுவலர் தூண்டுதலின் பேரில் அறநிலையத் துறைக்கு தகவல் அளிக்காமல் போலி ரசீது அச்சடிக்கப்பட்டு பணம் வசூல் செய்யப்படுகிறது. கோயிலில் கணக்கர் மற்றும் மணியம் பொறுப்பில் உள்ள கார்த்திக் என்பவர் திருப்பணி வேளைகளில் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், அலுவலகத்தில் வைத்து மது அருந்தும் வீடியோ வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தக்கார் சர்க்கரையம்மாள் பேசுகையில், “உதவி அரச்சகர் கோமதி விநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தார்.மேலும், ஆபாசமாக ஆடிய அர்ச்சகர்களை தாக்கியதாக மேட்டு தெருவை சேர்ந்த காளிராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment