by Satheesh on | 2025-06-25 05:20 PM
மதுரை :இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த பயணியின் உடைமையில் 6 பாக்கெட்டுகளில் பச்சை நிறத்தில் வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் கேட்டபோது, பயணி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார் இதையடுத்து அதிகாரிகள் அந்த பொருளை சோதனை செய்ததில், உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா என்பதும், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அலி அப்துல் காதர் (52) என்பதும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அலி அப்துல் காதரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!