by Vignesh Perumal on | 2025-06-25 11:35 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில், வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, பேரணி மற்றும் தர்ணா போராட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
வருவாய்த்துறை அலுவலர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில், இன்று காலை 10:00 மணிக்கு பேரணி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கியது. வருவாய்த்துறை அலுவலர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாகச் சென்றனர். பேரணி, திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் நிறைவடைந்து அங்கு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட அளவில் பல்வேறு வருவாய்த்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை தாங்கினர். மேலும், தா.ஜான் பாஸ்டின் (TNROA, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), சி.ராஜரத்தினம் (TNVAOA, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), இரா.விக்னேஷ் (TNSOU, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), க.சக்திவேல் (TNRVEA, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை வகித்தனர். போராட்டத்தின் துவக்க உரையை ம.சுகந்தி (மாவட்ட செயலாளர், TNROA) நிகழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்திற்கு வாழ்த்துரை வழங்கியோர் K.முருகானந்தம் (மாநில தலைவர், TNMCOA), D.மகாலிங்கம் (மாநில பொது செயலாளர், TNTPEA), T.இராஜமாணிக்கம் (மாநில துணைத் தலைவர், TNHREA), ஆ.ஜெசி (மாநில பொது செயலாளர், TNNMEA), ச.கண்ணன் (மேனாள் மாநில துணை தலைவர், TNROA), K.பெரியசாமி (மேனாள் மாவட்ட பொருளாளர், TNROA), பச்சையாண்டி (மேனாள் மாநில துணை தலைவர், TNSOU), முகமது சர்புதீன் (மேனாள் மாவட்ட செயலாளர், TNVAOA), R.பழனிச்சாமி (மேனாள் மாவட்ட தலைவர், TNVAOA), இரா.முருகன் (மேனாள் மாவட்ட தலைவர், TNVAOA), R.ரகுநாதன் (மேனாள் மாவட்ட தலைவர், TNVREA), மகேந்திரன் (ஒருங்கிணைப்பாளர், TNVREA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவுரையை S.முபாரக் அலி (மாவட்ட தலைவர், TNGEA) வழங்க, பாலகுருநாதன் (மாவட்ட துணை தலைவர், TNROA) நன்றியுரை கூறினார்.
வருவாய்த்துறை அலுவலர்களின் இந்தப் போராட்டம், தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !