by Satheesh on | 2025-06-24 02:48 PM
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு நேற்று தொடங்கியது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!