by Vignesh Perumal on | 2025-06-23 05:21 PM
தமிழக அரசின் நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில், 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட மொத்தம் 55 இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், முக்கியத் துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, முக்கிய மாநகராட்சிகளுக்கும் புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உயர்கல்வித்துறைச் செயலாளர் - சங்கர், வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் - ஷில்பா பிரபாகர் சதீஷ், மனிதவள மேலாண்துறைச் செயலாளர் - சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் - பிரகாஷ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் - ஆர்ஜி சஜீவனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் - மதுசூதன ரெட்டி, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) - ஜெயசீலன், சமூக சீர்திருத்தத்துறைச் செயலாளர் - வள்ளலார், மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர் - சமயமூர்த்தி, நிதித்துறை சிறப்புச் செயலாளர் - வெங்கடேஷ், போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் - லில்லி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை - உமா, திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமனம், ஆவடி மாநகராட்சி ஆணையராக சரண்யா நியமனம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமனம், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக அமித் நியமனம், நெல்லை மாநகராட்சி ஆணையராக மோனிகா ராணா நியமனம், ஒசூர் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம், ஈரோடு மாநகராட்சி ஆணையராக அர்ஃபித் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐ.ஏ.எஸ். இடமாற்றம், மாவட்ட ஆட்சியர்களின் நியமனங்களுடன் சேர்த்து, மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், நிர்வாகத்தில் புத்துணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தத்தமது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். அரசின் இந்த நடவடிக்கை, நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !