by admin on | 2025-02-15 07:50 PM
கொந்தளிக்கும் பத்திர பதிவு துறை அதிகாரிகள் சங்கம்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஆக இருப்பவர் கலைச்செல்வன் .இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுகிறார்.இவர் காவல்துறை ஆய்வாளராக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தொடர்ந்து 14 ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி எஸ் பி யாக பணியாற்றி வருகிறார். இவர் முறைகேடாக பத்திரங்களை பதிய செய்ய தூண்டுவதாகவும்,பதிவு துறை சார்பதிவாளர்களுக்கு ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுப்பதாக பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பத்திர பதிவு துறை சார்பதிவாளர்கள் பற்றி ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்துஅவர்கள் மூலமாக மிரட்டுவதாகவும் பத்திர பதிவு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் டி எஸ் பி கலைச்செல்வன் DVAC லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியாதவர்களை கொண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட சார்பதிவு அலுவலக அதிகாரிகளை மிரட்டுவாதவும் குற்றம் சாட்டுகிறார்கள்.இதில் அரசும் ,காவல்துறையும் உடனடியாக தலையிட்டு அடாவடி டி எஸ் பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திர பதிவு துறையினர், மேலும் தங்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சுந்தரபாண்டியன் பணிபாதுகாப்புக்கு,உயிர் பாதுகாப்புக்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
விரைவில் அடாவடி டி எஸ் பி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசின் பத்திர பதிவு துறைக்கும், காவல்துறையினருக்கும் நடக்கும் இந்த ஊழல் யுத்ததை அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும். இல்லை இதுவும் எதிர்கட்சியினர்க்கு அரசியல் செய்ய வாய்ப்பாய் போய்விடும்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!