by admin on | 2025-02-15 07:46 PM
தேனி மாவட்டம் சின்னமனூரில பாரதீய ஜனதா கட்சியின்பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்வதற்காக மாநில மகளிர் அணி தலைவி உமாராணி சின்னமனூர் வந்திருந்தார்.அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் ஆகும்.இதில் புதிதாக தொழில் துவங்குவர்களுக்கு , மு த்ரா கடன் திட்டம் மகளிர்களுக்கான கடன் உதவி திட்டம்.குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு தேவையான நிதி உதவி.போன்ற திட்டங்கள் மேலும் ரயில்வே விரிவாக்க திட்டம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள திட்டங்களை செயல்படுத்த போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து திமுக அரசின் குற்றச்சாட்டுபோன்று நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவதாகபொய்யான குற்றச்சாட்டை அதனுடைய கூட்டணி கட்சிகள் குறிப்பிடுவது போல் அல்லாமல் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு ஏன் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு அவர் எனக்குத் தெரியாது என குறிப்பிட்டார்.மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி யானையை பலப்படுத்துவதற்கு உள்ள 15 மரங்களைவெட்ட 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வனத்துறை அனுமதி வழங்கியது அதனை கேரளா அரசு தடுத்து நிறுத்தியது.இது பற்றி கேட்டதற்கு திமுகவின் கூட்டணி கம்யூனிஸ்ட் தான் ஆட்சி செய்யும் போது அதனை கேட்க வேண்டும் ஏன் திமுக அரசுக்கு தெரியவில்லை என்றார்.அதேபோல் கவர்னருக்கும் தமிழகமுதல்வருக்கும் உள்ள பிரச்சனை வேறு தெளிவுபடுத்தினார்.
நிருபர் பாஸ்கரன் தேனி .
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!