by admin on | 2025-02-15 05:37 PM
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சமஸ்தானம் ஶ்ரீகார்யம் அவர்கள் தெரிவிக்கும் தகவல்.
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் கடந்த 10 ஆம் தேதி முதல் திருச்சி திருவானைக்கோவில் சங்கர ஶ்ரீமடம் கிளையில் தமது பூஜாதி கிரமங்களுடன்முகாமிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
ஶ்ரீஸ்வாமிகள்,திருவானைக்கா ஶ்ரீஅகிலாண்டேஸவ்ரி அம்பாள் காதுகளை அலங்கரிக்கும் தாடங்கம் எனும் காதணிகளை பழுது நீக்கி சாஸ்த்ர பூர்வமான ப்ரதிஷ்டையினை 16-2-25 காலை 11.41 மணி முதல் 12.00 மணி வரையிலான காலத்தில் மேற்கொள்கிறார்கள்.
மேற்சொன்ன நேரம் மிக உன்னதமான முகூர்த்த நேரமாகும். ஆதலால் அந்த நல்ல முகூர்த்தத்தில் மக்கள் தம்தம் இல்லத்திலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கர்ண வேதனம் எனும் காதணி விழாவினை நடத்திக் கொள்வது அவர்களுக்கு மிக உன்னத பலன்களை அளிக்க வல்லது.
திருவானைக்காவில் (சங்கர மடம்) ஶ்ரீமடம் கிளையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேஷ பந்தலில் காதணி விழாவினை நடத்திக் கொள்ளலா இந் நிகழ்ச்சிக்கென தொழில் வல்லுனர்களின் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் சிறுவர் சிறுமியர்களுடன் கலந்து கொள்ள விருப்பம் உடைய பெற்றோர் கீழ்க்காணும் ஶ்ரீமடம் அலுவலர்களை குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு
சிறுவர் சிறுமியர்களுக்கான காதணிகள் மூக்குத்தி முதலியவைகளை பெற்றோர்கள் கண்டிப்பாகக் கொண்டுவரவேண்டும்.
மங்கலப் பொருட்கள் பிரஸாதம் முதலியன ஶ்ரீமடத்தில் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு* தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர், கைபேசி எண்
*ஸ்ரீ R. அனந்தராமகிருஷ்ணன் 9445917432*
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!