by admin on | 2025-02-14 09:24 PM
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டைசேர்ந்தவர் உத்தண்டபிள்ளை இவருக்கு பாலமுருகன் மற்றும் சித்ரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில், இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தாய் இறந்ததால் குழந்தைகள் வளர்க்கவும் பொருளாதார ரீதியாகவும் குடும்பம் சிரமப்பட்டுள்ளது. இதனால் உத்தண்ட பிள்ளையின் மைத்துனர் ராஜு என்பவர் ஆறு வயது சிறுவனாகிய பாலமுருகனையும் அவரது தங்கை சித்ராவையும் திருவனந்தபுரத்தில் உள்ள கான்வென்டில் கொண்டுபோய்சேர்த்துள்ளார்.அங்கு இரு குழந்தைகளும் தங்கி
இருந்த நிலையில் அங்கு வந்த இத்தாலிநாட்டைச் சேர்ந்த கிறஸ்டியானோ,லூசானா தம்பதியினர் குழந்தைகளை தாங்கள் வளர்த்துக் கொள்வதாக இத்தாலி நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். விவசாய தம்பதியினரான அவர்கள் வளர்ப்பில் முருகன்,சித்ரா என்ற அதே பெயரிலேயே வளர்க்கப்பட்டனர். தற்போது 38 வருடங்கள் கடந்தநிலையில் இத்தாலி வளர்ப்பு பெற்றோர்கள் கிறிஸ்டியானோ,லூசானா ஆகிய இருவரும் காலமடைந்துவிட்டனர். முருகன் தனது வளர்ப்பு பெற்றோரின் பெரிய அளவிலான விவசாயத் தொழிலை இத்தாலியில் செய்துவருகிறார். ஆடிட்டிங் வேலைசெய்து வரும் தங்கை சித்ராமருத்துவர் ஒருவரை திருமணம் முடித்து ஆண்,பெண் என இரு பிள்ளைகள் எனஇத்தாலிலேயேசெட்டில் ஆகிவிட்டார்
ஆனால்முருகன்இந்தியாவில் உள்ள ன தனதுபெற்றோரையும் உறவினர்களையும் எப்படியாவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். தற்போதைய இவருக்குவயது 44 ஆகிறது. 1991-ல் முருகனின் தாய் மாமா ராஜு என்பவர் இத்தாலியில் உள்ளகிரஸ்யானோ லூசானா தம்பதிக்குஒரு கடிதம்எழுதி இருந்தனர் அதில் தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டைவிலாசம் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் முருகனுக்கு தமிழ் பேசவும் எழுதவும்தெரியாதுசுத்தமாக மறந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காளையார்கோவிலைச் சேர்ந்தஜோசப் என்பவர் இத்தாலியில் இவருக்கு அறிமுகமாகியுள்ளார் இத்தாலி மொழியும் தமிழும் நன்கு பேசவும்எழுதவும் தெரிந்த ஜோசப் உதவியுடன் முருகன் தனது பிறந்த மண்ணையும் உறவுகளையும் தேடி நேற்று தேனிமாவட்டம்மார்க்கையன்கோட்டை வந்தடைந்தார்.தமிழ் அறவே மறந்து போன நிலையில் ஜோசப் உதவியுடன்பழையநினைவுகள்ஒவ்வொன்றாக உறவினர்களுடன் இத்தாலி மொழியில்பகிர்ந்துகொண்டார்.முருகனின் பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் அவரது அக்கா மற்றும் தாய் மாமாமனைவி மற்றும் உறவினர்கள் முருகனைக் கண்டுஆனந்த கண்ணீர் வடித்தனர்.இந்தநெகிழ்ச்சியான தருணத்தில் முருகன் தனது பிறந்த மண்ணையும் உறவுகளையும்காண்பதற்காகத்தான் இத்தனை நாள் காத்துக் கிடந்தேன்.அதற்காகவே திருமணமும் செய்து கொள்ளாமல் இருந்துவந்தேன். இனி வரும் காலத்தில் உறவுகளோடு இனிதொடர்பில்இருப்பதோடு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்டாயம் இங்கு வந்து செல்வேன் என்று ஆனந்த கண்ணீரோடு தெரிவித்தார்.
தாய் மொழி மறந்து போன நிலையிலும் 38 வருடங்கள் கழித்து பிறந்த ஊரையும் உறவுகளையும் இளைஞர் ஒருவர் தேடி வந்திருப்பது உறவினர்கள் மட்டுமின்றி அந்த ஊர் மக்களையும் நெகிழ்ச்சிஅடையவைத்துள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!