by admin on | 2025-02-13 09:19 PM
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகநடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதிவிசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்திய தண்டனைச் சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட (கற்பழிப்பு )வழக்கு என தெரிவித்தார். இதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ,
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வழக்கை வரும் 19ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, அன்றே இந்த வழக்கு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!