by admin on | 2025-02-13 07:54 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் , தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது : "பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் தான். பஞ்சமி நிலமல்ல. நான் விலைக்கு வாங்கிய நிலத்தை, அதே நபரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டேன். எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் இல்லை.அதிமுகவில் நான், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் கூக்குரலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அதிமுகவில் இணைவதற்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் இவ்வாறு பேசினார்.
நிருபர்
சதீஷ்குமார் தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!