| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

திமுக அரசுக்கு எதிராக 82 மாவட்டங்களில் திண்ணை பிரச்சாரம்........!!!!

by admin on | 2025-02-13 06:54 PM

Share:


திமுக அரசுக்கு எதிராக 82 மாவட்டங்களில் திண்ணை பிரச்சாரம்........!!!!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ,உலக அமைதி வேண்டிசென்ற புத்தபீட்சுகள், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புவழிபாடு செய்தனர்.

கழக அம்மா பேரவை செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார் இந்த நிகழ்ச்சிகள் கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம் ,கருப்பையா, மாநில நிர்வாகிகள் தனராஜன், வெற்றிவேல், ராமகிருஷ்ணன் , மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன் ,ராமசாமி, அட்சய பாத்திர நிறுவன நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது

திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் அதிமுகவை நடத்தி வருகிறார் ,நாளை அம்மா பேரவை சார்பில் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இன்றைக்கு உள்ள திமுக அரசு விளம்பர அரசாக தம்பட்டம் அடித்துக்கொண்டு வருகிறது இன்றைக்கு திமுகவின் அரசை எடப்பாடியார் தோலுரித்துக் காட்டு வருகிறார் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 6 கோடி 30 லட்சம் வாக்காளர்கள் இடத்தில் அதிமுக சாதனையை எடுத்து கூறும் வகையில்ஒரு கையில் கட்சி கொடி, மறுகையில் சாதனைவிளக்க துண்டு பிரசுரங்களைக் மேற்கொள்ள இருக்கிறோம்.

அதிமுகவின் திண்ணை பிரச்சாரமாக கொண்டு செல்லக்கூடிய வேளையில்,

ஒவ்வொரு நாளும் நான் வெளியிடக்கூடிய வீடியோ மூலமாக அனைவருக்கும் அழைப்பு கொடுக்கும் வண்ணமாக காலையில் வீடியோ வெளியிட்டிருந்தேன் ஆனால் அந்த வீடியோவை அவரவருக்கேற்றார் போல் வெளியிடப்பட்டிருக்கின்றன .யார் மனதையும் புண்படுத்துவதற்காகவும் அல்லது பதில் சொல்வதற்காகவோ அல்ல 

 திண்ணை பிரச்சாரங்களை நாம் தீவிரமாக எடுத்து சென்று இந்த திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் அந்த வீடியோவில் கூறியிருந்தேன்ஜனநாயகத்தை வளர செய்ய வேண்டும் இன்றைக்கு ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது இதை தமிழக மக்களுக்கு விழிப்புணர்வாக எச்சரிக்கை இருக்கவேண்டும்என்பதுதான் இந்த திண்ணை பிரச்சாரம்

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் காது மூக்கு வாய் வைத்துபல்வேறுவிமர்சனங்கள் சொல்லி வருகின்றார்கள் யாருக்கும் பதில்சொல்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை

யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் வீடியோ வெளியிடவில்லை

புரட்சித்தலைவர் மற்றும் அம்மா கோவிலிலே இங்கு புத்த பீச்சுகள் வந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்இந்த இடத்திலிருந்து நான் கூறுகிறேன் யாருக்கும் விளக்கம் கூறுவதற்காக நான் வீடியோ வெளியிடவில்லை

திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரமாக மக்களிடத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதைத்தான் நான் வீடியோ பதிவாக நான் காலையில் வெளியேற்றிருந்தேன் .எடப்பாடியார் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் மலர வேண்டும்.

நான் சத்தியம் செய்து சொல்கிறேன் அம்மாவின் திருக்கோவில் முன்புமீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில்

அமையும்.எட்டுக்கோடி தமிழர்களின் ஆசி எடப்பாடியாருக்கு உண்டு

 நம்முடைய எதிரி திமுக ஒருவர்தான். திமுகவிற்கு எடப்பாடியார் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்

கேட்டுக்கொள்கிறேன் .முன்னாள் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை நாங்கள் மதிக்கின்றோம்அதை சுட்டிக்காட்டியது தான்இன்று பல்வேறுசர்ச்சை எழுப்பி இருக்கிறது

 காலையில் கூட நான் அவரிடம் பேசி இருக்கிறேன் . (செங்கோட்டையன்)

அண்ணன் செங்கோட்டையனின் தியாகத்தை சாதாரணமாக மதிப்பட முடியாது அதில் எந்தவித மாற்றமும் இல்லை

அத்திக்கடவு அவிநாசி திட்ட நன்றிஅறிவிப்பு கூட்டத்தில் அம்மா அவர்களின் தூதுவராகத்தான்

 எடப்பாடியார் சென்றார் 

 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆளுகின்ற கட்சியாக இருந்துள்ளது அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு 4.ஆண்டுகள் சிறப்பானஆட்சி கொடுத்தவர் எடப்பாடியார்.

சத்தியம்செய்துசொல்கிறேன் எம்ஜிஆர்,அம்மாஆகியோருடைய ஆன்மா எடப்பாடியாருடன்இணைந்து இந்த இயக்கத்தை காப்பாற்றி வருகிறது.

எடப்பாடியாருடன்இணைந்த இந்தஆத்மாக்களுடன் சக்தியையாராலும் தோற்கடிக்க முடியாது என கூறினார்.


படம் செய்தி :

K.S.பாலகிருஷ்ணன் மதுரை

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment