by admin on | 2025-02-12 03:53 PM
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பெரியகுளம் போடி கம்பம் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனிமவளக்கொள்ள என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. குறிப்பாக அனுமதி பெற்ற அளவை விட கூடுதல் திறன் கொண்ட வெடி மருந்துகளை பயன்படுத்தி கனிம வளங்களை வெட்டி எடுத்து கூடுதல் விலைக்கு கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் பேரில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் ஆண்டிபட்டி பெரியகுளம் பகுதியில் கல்குவாரிகளில் ஆய்வு செய்து அனுமதி பெற்ற அளவைவிட முறைகேடாக கூடுதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ
நூறு கோடிக்கு மேல் கல்குவாரிகளுக்கு அபராதம் விதித்தார். ஆனால்
இதை தடுக்க வேண்டிய கனிமவளத்துறை மாவட்ட அதிகாரிகள் தாசில்தார்கள் மற்றும் போலீசார் ஆகியோர் பெறுவதைப் பெற்றுக் கண்டு கொள்வதில்லை. இதனால் கனிம வள கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல் கனிம வளங்களை வெட்டி எடுத்து கேரளாவிற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கை தேனி கலெக்டர் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரி வருகின்றனர். கலெக்டர் ஷஜிவனா அவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஆர்வம் காட்ட வில்லை. எனவே புதிதாக பொறுப்பு ஏற்க உள்ள கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிம கொள்ளையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவாரா???
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!