by admin on | 2025-02-11 01:42 PM
திருமுல்லைவாயலில் 1.68 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
திருமுல்லைவாயில் சிடிஎச் சாலையை ஒட்டி கணக்கன்குட்டை என்ற நீர்நிலை புறம்போக்கு இருந்தது. இதை 11 தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஆட்சியர் பிரதீப், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில் கடந்த திங்கள்கிழமை அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்பார்வை செய்தனர். திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் . மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!