by admin on | 2025-02-10 08:14 PM
தேனி மாவட்டம் மதுரையிலிருந்து பிரிந்த பிறகு பல கலெக்டர்களை இந்த மாவட்ட மக்கள் பார்த்து இருக்கிறார்கள். குறிப்பாக மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற நடவடிக்கை மூலம் கடந்த 2009 முதல் தேனி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் கால் வைத்துப் பார்க்காத கிராமங்களின் பல பெயர்களை தெரியாத கிராமங்களுக்கு நேரில் சென்று இரவு தங்கி அந்த மக்களோடு கலந்துரையாடி அவர்கள் கொடுக்கின்ற உணவுகளை உண்டு மக்களோடு மக்களாக பழகி அனைத்து துறை அலுவலர்களையும் அந்த கிராமத்திற்கு வரவைத்து
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பிரச்சினைகளை மக்களிடமிருந்து மனுக்களாக பெற்று உடனுக்குடன் தீர்வு கண்ட கலெக்டர் உயர்திரு முத்துவீரன் அவர்கள். அதன் பிறகு பொறுப்புக்கு வந்த மரியாதைக்குரிய கலெக்டர் பழனிசாமி அவர்கள் உயர்திரு வெங்கடாசலம் அவர்கள் மரியாதைக்குரிய முரளிதரன் ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர்களாக பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பொறுப்பில் இருந்த காலங்களில்இந்த மாவட்ட மக்களுக்கு சொர்க்கமே.. மேலும் பிரச்சினைகள் குறித்து அனைத்து தரப்பினரும் எளிதாக அவர்களை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகளை அவர்கள் பொதுமக்களுக்கு கொடுத்தனர்.
அதன் பிறகு
தேனி கலெக்டராக பொறுப்பேற்றஷஜீவனா அவர்கள் பதவியில் இருந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேனி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் எதையும் கண்டுகொள்ளவில்லை. நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தில் மட்டு நலம் பெறுவதற்காக இருந்த கலெக்டர் ஷஜீவனா அவர்கள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது பொறுப்பில் இருந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற எந்த ஒரு நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவரிடம் கொடுத்த மனுக்கள் கிடப்பில் மட்டுமே போடப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இல்லை.அதிகாரிகள் மணிகள்குறித்து அவரிடம் கலந்து ஆலோசித்து பைலில் கையெழுத்து வாங்க செல்கின்ற பொழுது இவரை சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை பல மணி நேரம் காக்க வைத்து அதிகாரிகளை திருப்பி மட்டுமே அனுப்பி உள்ளார்.
குறிப்பாக இரவு 9 மணி வரை காத்திருக்க வைத்து கலெக்டர் பிஸியாக இருக்கிறார் நாளை வாருங்கள் என்று கூறுகின்ற பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது. கலெக்டர் ஷஜீவனா அவர்களின் இடமாற்றம் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதற்காக அனைத்து தரப்பினரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கின்றனர்.
தி.முத்து காமாட்சி
எவிடன்ஸ் வெளியீட்டாளர் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!