by admin on | 2025-02-10 08:13 PM
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறையின் கீழ் இயங்கும் யுனானி மருத்துவத்தின் 9வது தேசிய யுனானி தின விழா முன்னிட்டு நாகூர் தர்காவில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் சுமார் 490 வருடங்களுக்கு முன்னர் நாகூரில் பொதுமக்களுக்கு யுனானி, சித்த மருத்துவ முறையில், மருத்துவப் பணி செய்ததாக அன்னாரின் வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. இன்றும் நாகூர் தர்காவில் மருத்துவ சாறு என்று அழைக்கப்படும் மூலிகைச் சாறு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் திருமதி ஜோதி சாந்தகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜே அப்துல் மஜீத் தலைமையில் நாகூர் தர்கா பிரசிடெண்ட் செய்யது முகமது கலிபா சாஹிப், நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி சுல்தான் கலிபா சாஹிப், நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி சேக் ஹசன் சாகிப், ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் இன்றைய தினம் துவங்கியது. சமூக ஆர்வலர் முஹம்மது தாகா மறைக்காயர் மற்றும் ஜெஹபர் உசேன் உடன் இருந்தனர்.
யுனானி மருத்துவர் வி்.முசம்மில் அகமத் மற்றும் மருத்துவர் ஆயிஷா அவர்களால் இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. சமூக சேவகர் தெத்தி H.ஜாகிர் ஹுசைன் இந்த முகாமினை ஏற்பாடு செய்திருந்தார். முகாமில் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை சித்த மருத்துவ மருந்தாளுநர் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 150 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!