by admin on | 2025-02-10 06:57 PM
சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தேனி மாவட்டம் சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குட முழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயிலில் உபயதாரர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் நடைபெற்று கடந்த மூன்று நாட்களாக கும்பாபிஷேக வேள்விச்சாலை நிகழ்ச்சிகள் நடைபெற்று ஐந்து கால பூஜை நடைபெற்றது. இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யா ஹணசனம்,ஆறாம் கால பூஜை நடைபெற்றது. த்ரவ்யாஹீதி , பூர்ணாஹீதியை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான திருக்குடங்களுக்கு நடைபெற்றது.
பின்னர்சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் சமகால மகா திருக்குட முழுக்கு நடைபெற்று, மஹா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவதால் சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை,திருக்கோயில் உபயதாரர்கள், அனைத்து சமுதாய பெருமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வண்டிகள்,ஆம்புலன்ஸ், மருத்துவமுகாம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் சுகாதாரவசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தனர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டு மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து சுவாமி ந
தேனிதிருவீதி உலா நடைபெற உள்ளது.
நிருபர் செல்வ பிரபா உத்தமபாளையம் தேனி