by Muthukamatchi on | 2025-06-08 07:49 PM
பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம்
பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளையின் நிர்வாக கூட்டம் 07-06-2025 ஆம் நாள் ஆம் நாள் சனிக்கிழமை நாளை 6:00 மணி அளவில் தேனி வைகை ஐ கேர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 14ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் விவாதிக்கப்பட்டன.கலா பாண்டியன் கல்வி நிறுவனங்கள் சேர்மன் திரு கலா பாண்டியன் அவர்கள் உணவுக்கான செலவு முழுமையாகவும், ரூபாய் 50,000 அறக்கட்டளைக்கும் மேலும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு எடுத்த முதல் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிசு வழங்கவும் உறுதிமொழி அளித்துள்ளார். வரும் காலங்களில் கோல்ட் காயின் தங்க காசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இவரது நன்கொடை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.நிர்வாகிகள் தலா ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதிமொழி அளித்துள்ளனர். கேடயம் மற்றும் சான்றிதழ் பற்றி விவாதிக்கப்பட்டு பொருட்கள் தேர்வு செய்யப்பட்டன.மகளிர் அணி இளைஞரணி செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மங்கையர்க்கரசி கல்லூரியின் சேர்மன் திரு P அசோகன் அவர்கள் மற்றும் BLP Estates & கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சேர்மன் ஆர் பாஸ்கர் அவர்களுக்கு அறக்கட்டளைக்கு ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வழங்கியதற்கும் மேலும் பல நல்ல திட்டங்கள் வழங்க வழங்கப் போவதற்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் MSS காந்தவாசன் அவர்கள், கௌரவத் தலைவர் திரு கலா பாண்டியன் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு போடி N ரவி பிள்ளை அவர்கள் மாவட்ட செயலாளர் திரு E சன்னாசி பிள்ளை அவர்கள் மாவட்ட பொருளாளர் திரு கனகராஜ் அவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் திரு PS நடராஜன் அவர்கள், KK பட்டி திரு குமரேசன் அவர்கள், ஆண்டிபட்டி முன்னாள் ராணுவ அதிகாரி திரு லட்சுமணன் அவர்கள், இணைச்செயலாளர் திரு P வெங்கடேஷ் அவர்கள், தேனி முன்னாள் விவசாயத்துறை அதிகாரி குமரவேல் அவர்கள், கம்பம் யோகா ஆசிரியர் திரு ரவி ராம் அவர்கள் சின்னமனூர் NMS கண்ணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
இங்ஙனம்,
E சன்னாசி பிள்ளை மாவட்ட செயலாளர் பிள்ளைமார் முதலியார் நல அறக்கட்டளை08-06-2025
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!