by Vignesh Perumal on | 2025-06-08 04:25 PM
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றியத்தில், புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையேற்று, முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர். சி. விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.ம.மு.க., ஐ.ஜே.கே உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தனர்.
கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, புதுக்கோட்டை அரசியல் களத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்தது.
புதிதாக அ.தி.மு.க-வில் இணைந்த அனைவரையும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் வேட்டி அணிவித்து அன்புடன் வரவேற்றார். அ.ம.மு.க கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், ஆறுமுகம், ரமேஷ், பன்னீர், முருகேசன், தானீஸ்லாஸ், பாஸ்கரன், பழனிவேல், ராஜசேகர், தமிழரசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா, கறம்பக்குடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முத்துக்குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இந்த இணைப்பு விழா, எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு அ.தி.மு.க-வின் அடித்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு மேலும் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!