by Vignesh Perumal on | 2025-06-04 09:27 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர்/ தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (04.06.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங்கி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கனிமவளத்துறை, தொழில் வணிகத்துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நல வாரியம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ்துறைரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் விவரங்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரான தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
துறை சார்ந்த அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி, விரிவாக எடுத்துரைத்தனர். மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர்/ தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாநில அரசுடன் இணைந்து எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை கண்காணித்து, அத்திட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு நடத்தப்படுகிறது.
எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களிடையே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என குழுத் தலைவரும்/தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று நலத்திட்டங்கள் வழங்கும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள 3 சமுதாய வழிநடத்துபர்கள் மற்றும் 7 சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை கண்காணிப்பு குழுத் தலைவர்/ தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.1,01,800/- மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 29 மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1,18,500/- மதிப்பிலான Spinal Type இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 1 மாற்றுத்திறனாளிக்கும் என மொத்தம் 30 மொத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,70,700/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பு குழுத் தலைவர்/ தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சிவபிரசாத், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி, பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கேல்கர் சுப்பிரமணி பாலசந்திரா இ.கா.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துமாதவன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) திரு.சுந்தரேசன், நகர்மன்றத் தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி வனிதா நெப்போலியன் (கம்பம்), திருமதி ராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்), பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!