by Satheesh on | 2025-06-03 01:39 PM
இதையெல்லாம் விசாரித்தார்களா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கேள்வி. அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த டிச.,23ம் தேதியுடன் தொடங்கும் 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை டிச.,23ல் நடந்துள்ளது. டிச.,24ம் தேதி இரவு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன் கோட்டூர்புரம் ஸ்டேஷனில் இருந்து 8.30 மணிக்கு வெளியே வந்த பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு போனில் பேசுகிறார் தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம்.8.32 மணிக்கு மீண்டும் இருவரும் பேசுகின்றனர். எதற்காக இவ்வளவு பதட்டம்?டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த மறுநாள்(டிச.,24ம் தேதி) ஞானசேகரனும், தி.மு.க., வட்டச் செயலாளர் சண்முகமும், 5 முறை போனில் பேசுகின்றனர்.காலை 7.27 மணிக்கு முதல் அழைப்பு. மாலை 4.01 மணி வரை 5 முறை பேசுகிறார்கள். அதன் பிறகு தான் போலீஸ் ஞானசேகரனை அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது பேசவில்லை. வெளியில் வந்த பிறகு மீண்டும் ஞானசேகரனும் சண்முகமும் பேசுகின்றனர். எதற்கு விடுவித்தனர்? அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரனுக்கு கூப்பிடுகிறார். இதை போலீசார் விசாரித்தார்களா? குற்றப்பத்திரிகையில் இந்த விஷயம் இடம் பெற்றுள்ளதா?அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்தமிழக B J P முன்னாள் தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு வலியுறுத்தல்.
செய்தியாளர் : N .சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!