| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

இன்று செம்மொழி நாள்...! மெரினாவில் குவியும் மக்கள்..!

by Vignesh Perumal on | 2025-06-03 10:31 AM

Share:


இன்று செம்மொழி நாள்...! மெரினாவில் குவியும் மக்கள்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3, 2025, செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம், அவரது பிறந்தநாளை முன்னிட்டுப் பல்வேறு வகையான வண்ண மலர்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மலர்களால் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் பொறிக்கப்பட்டும், "செம்மொழி நாள்" என்ற வாசகத்துடன் கூடிய பேனர்களும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, தமிழ்நாடு அரசின் சார்பில் "செம்மொழி நாள்" விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அன்னை தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றும் வகையிலும் இந்த நாள் செம்மொழி நாளாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். மேலும், காலை 10.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் "செம்மொழி நாள்" விழா நடைபெறும். இதில், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடப்படும்.

கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் பெரும் பங்காற்றினார். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தருவதிலும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். அவரது இந்த தமிழ்ப்பணியை நினைவு கூறும் வகையிலேயே அவரது பிறந்தநாள் "செம்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாக்கள், தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழார்வலர்களால் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment