by Satheesh on | 2025-06-02 09:36 PM
பள்ளி திறந்த முதல்நாளே பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர்
கன்னியாகுமரி : நாகர்கோவில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மதுபானம் வாங்கிச் செல்லும் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவன் ஒருவன் பகிரங்கமாக, பொதுவெளியில், பட்டப் பகலில் அதுவும் பள்ளிச்சீருடையில் அரசு மதுபான கடைக்கு சென்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் பள்ளிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளதே காரணம் என பரவலாக பேசப்படுகிறது. பள்ளி சீருடை அணிந்த மாணவருக்கு மதுபானத்தை விற்பனை செய்த விற்பனையாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், மதுபான கடைகளை குறைக்கவும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!