by Vignesh Perumal on | 2025-05-31 03:09 PM
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 32 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சேலம் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளும் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருக்குத் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கொரோனாவின் தாக்கத்துடன், அவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இணை நோய்கள் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்து, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதனுடன் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் தொடர்பான இணை நோய்களும் இருந்ததும் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. கொரோனா தொடர்பாக பதற்றம் வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு, கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக அகலவில்லை என்பதையும், இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!