by Vignesh Perumal on | 2025-05-31 02:42 PM
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் சாமி சிலையிலிருந்த தங்கத் தாலி மற்றும் வெள்ளிக் கொலுசைத் திருடிய வழக்கில், ரீபல் (30) என்ற இளைஞனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதம்பாக்கம், உள்ளகரம் பகுதி எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள பழமையான பச்சையம்மன் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோயில் பூசாரி அதிகாலையில் கோயிலைத் திறக்க வந்தபோது, சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 3 சவரன் எடையுள்ள தங்கத் தாலி மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயிலைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவு நேரத்தில் ஒருவன் கோயிலுக்குள் புகுந்து சிலையில் இருந்த நகைகளைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவன் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரீபல் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரீபலைக் கைது செய்தனர். அவனிடமிருந்து திருடப்பட்ட தங்கத் தாலி மற்றும் வெள்ளிக் கொலுசுகளை மீட்டனர்.
ரீபல் இதற்கு முன்பு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவனா என்பது குறித்தும், இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!