by Vignesh Perumal on | 2025-05-30 08:14 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற ஜூன் 9 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறை சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் அல்ல என்றும், இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜூன் 14 ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) அனைத்து அலுவலகங்களுக்கும் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, மே 31 ஆம் தேதி வசந்த திருவிழாவுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாளான ஜூன் 9 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும், விழாவைச் சிறப்பிக்கும் வகையிலும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!