by Vignesh Perumal on | 2025-05-30 04:44 PM
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், திட்டமிட்டபடி ஜூன் 2 ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி, 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் எழுந்த நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், ஜூன் 2 ஆம் தேதியே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்றாக தூய்மைபடுத்தப்பட்டு இருக்க வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடங்கள் மாணவர்கள் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் அடங்கும்.
ஆகவே, தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், ஜூன் 2 ஆம் தேதியே பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!