| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கைது..!

by Vignesh Perumal on | 2025-05-30 03:58 PM

Share:


ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை துணை இயக்குநர்  கைது..!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரியில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கை முடித்து வைக்க தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி, மத்திய புலனாய்வுத் துறையினரால் (சிபிஐ) கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தொழிலதிபர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act - PMLA) வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக, அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி, தொழிலதிபருடன் பேரம் பேசியுள்ளார். ஆரம்பத்தில் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொழிலதிபர் ரூ.2 கோடி தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ.20 லட்சம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசியமாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சிபிஐ அதிகாரிகள் புவனேஸ்வரியில் ஒரு பொறி வைத்து காத்திருந்தனர். திட்டமிட்டபடி, இன்று தொழிலதிபரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த கைது சம்பவம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தகைய உயர் அதிகாரியின் கைது, பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment