by Vignesh Perumal on | 2025-05-30 03:48 PM
2025-26 ஆம் கல்வியாண்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் நோக்கில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
"புதுமைப் பெண்", "தமிழ்ப் புதல்வன்" போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தேவைகளை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 26, 2025 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த 11 கல்லூரிகள் தொடங்கப்பட்ட இடங்கள்:
கடலூர் மாவட்டம் - பண்ருட்டி
நீலகிரி மாவட்டம் - குன்னூர்
திண்டுக்கல் மாவட்டம் - நத்தம்
சென்னை மாவட்டம் - ஆலந்தூர்
விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி
செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர்
சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை
திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை
தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர்
பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர்
தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம்
இதனைத் தொடர்ந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில், தற்போது நமது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இக்கல்வியாண்டில் (2025-2026) மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உயர்கல்வித் துறை சார்பில் தொடங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 4 புதிய கல்லூரிகள் அமையவுள்ள இடங்கள்:
வேலூர் மாவட்டம் - கே.வி.குப்பம்
திருச்சி மாவட்டம் - துறையூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை
திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம்
இந்த புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம், இப்பகுதிகளில் உள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கை, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதோடு, தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!