by Muthukamatchi on | 2025-05-30 02:26 PM
*மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு*
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்று வந்தவர்களுக்கு இந்த ஆண்டு திடீர் என அடையாள அட்டையை நிறுத்தியதால் தமிழகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு அடையாள அட்டையை விரைந்து வழங்கிட கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினார். உடன் சுற்றுச்சூழல் மாணிக்கவாசகம் உடனிருந்தார்.
மேலும் இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் ஆகியோருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் நலனில்.. எஸ்.சரவணன் தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!