by Vignesh Perumal on | 2025-05-29 10:17 PM
தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வினால், போக்குவரத்து ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப் பலன்கள் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஊதிய உயர்வினால் ஏற்படும் நிலுவைத் தொகை 2024 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்கு காலாண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட மற்ற முக்கிய முடிவுகள்:
சலவைப்படி: போக்குவரத்து ஊழியர்களுக்கான சலவைப்படி ரூ.160 ஆக உயர்த்தப்படும்.
தனி பேட்டா: தனி பேட்டா ரூ.21 ஆக உயர்த்தப்படும்.
திருமண கடன்: ஊழியர்களுக்கான திருமண கடன் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த 15வது ஊதிய ஒப்பந்தம், போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான ஊதிய உயர்வு மற்றும் இதரப் பலன்களைப் பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!