by Vignesh Perumal on | 2025-05-29 08:41 PM
தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (மே 29, 2025) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, வேளாண்மை விரிவாக்கச் சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் "உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், அம்மாபட்டி ஊராட்சி, குரும்பட்டி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. என். ராமகிருஷ்ணன் அவர்களும் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 'உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை' என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், உழவர்கள் பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்திடத் தேவையான தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், அனைத்துத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து வட்டாரம் வாரியாகக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், வேளாண்மை விரிவாக்கச் சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும். இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். எனவே, தங்களது கிராமங்களில் இம்முகாம் நடைபெறும்போது விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஒரு நபருக்கு தென்னங்கன்றும், இரண்டு நபர்களுக்கு தக்காளி நாற்றுகளும், மேலும் இரண்டு நபர்களுக்கு வேளாண் இடுபொருட்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன.
இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி வட்டத்தில்: சண்முகசுந்தரபுரம், தெப்பம்பட்டி. தேனி வட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி.
பெரியகுளம் வட்டத்தில் வடகரை பிட்-1, கெங்குவார்பட்டி பிட்-1.
கடமலைக்குண்டு வட்டத்தில் மயிலாடும்பாறை, வள்ளல்நதி (கண்டமனூர்). போடிநாயக்கனூர் வட்டத்தில் உப்புக்கோட்டை, பூதிப்புரம். சின்னமனூர் வட்டத்தில் சின்னஓவுலாபுரம், ஓடைப்பட்டி.
உத்தமபாளையம் வட்டத்தில் அம்மாபட்டி, மல்லிங்காபுரம். கம்பம் வட்டத்தில் க.புதுப்பட்டி, கீழக்கூடலூர் (கிழக்கு).
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் இணை இயக்குநர்கள் திருமதி. சாந்தாமணி (வேளாண்மைத்துறை), திரு. கோயில்ராஜா (கால்நடை பராமரிப்புத்துறை), திரு. கலைச்செல்வி (மருத்துவப்பணிகள்), துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திருமதி. நிர்மலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி. வளர்மதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு. செய்யது முகமது, உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!
ஜீவனாம்ச வழக்கு - கணவன் கேட்ட ஒரே கேள்வி ! ஷாக்கான நீதிபதி !!
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!
புதிய கூட்டணிக்கு வியூகம் - தமிழக அரசியலில் பரபரப்பு ! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !!