by Vignesh Perumal on | 2025-05-29 04:13 PM
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலக முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான பனட்டோனி (Panattoni), தமிழ்நாட்டில் தனது தொழில் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒசூரில் ரூ.210 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான தொழிற்பூங்காவை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் தொழிற்பூங்கா, "பனட்டோனி பார்க், ஒசூர் I" (Panattoni Park, Hosur I) என பெயரிடப்பட்டுள்ளது. இது அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒரு 'Grade A' தொழிற்பூங்காவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ், மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் (3PL), FMCG (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) மற்றும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு இந்த பூங்கா ஏற்றதாக அமையும்.
இது குறித்து பனட்டோனி இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்தீப் சந்தா கூறுகையில், "ஒசூர் சந்தையில் நாங்கள் அடியெடுத்து வைப்பது, இந்தியாவின் Tier-1 நகரங்கள் மற்றும் அதிக வளர்ச்சி சாத்தியமுள்ள கிடங்கு மையங்களில் எங்களது இருப்பை வலுப்படுத்த Panattoni-ன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்தத் தொழிற்பூங்கா, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சந்தைக்கு விரைவாகச் செல்லவும், சிறந்த உள்கட்டமைப்பை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த திட்டம் பனட்டோனி நிறுவனத்தின் இந்தியாவில் இரண்டாவது பெரிய திட்டமாகும். ஏற்கெனவே, டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) 3.60 லட்சம் சதுர அடியில் (Panattoni Park NH71) ஒரு தொழிற்பூங்காவை அமைத்து வருகிறது. இந்த திட்டம் ஜூலை 2024 இல் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமானத்தில் உள்ளது.
ஒசூரில் அமையவுள்ள இந்த தொழிற்பூங்காவின் கட்டுமானப் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்றும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முடிக்கப்படும் என்றும் சந்தீப் சந்தா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒசூர், NH-44, STRR மற்றும் SIPCOT Phase 2 மண்டலம் போன்ற முக்கிய சாலை இணைப்புகளுடன் சிறந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளது. இது திறமையான தொழிலாளர் படையையும் அணுகக்கூடியதாக உள்ளது.
இந்த திட்டம், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளின் வளர்ச்சிக்கு பனட்டோனி நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!