by Vignesh Perumal on | 2025-05-29 01:33 PM
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் பரசுராமன் விலகியுள்ளார். தனது விலகலுக்கு "சொந்த காரணங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு, "மருத்துவர் அய்யா ராமதாஸ் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம்" என்று தெரிவித்துள்ளார். இது பாமக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகனான முகுந்தன் பரசுராமன், கடந்த 2024 ஆம் ஆண்டு பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸால் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு, அப்போதைய பாமக தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு உடன்பாடில்லை என்று கூறப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே அன்புமணி ராமதாஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், இது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அண்மையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தியதாகவும், இதற்கு அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியதாகவும் ராமதாஸ் பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், "வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன்" என்றும் ராமதாஸ் வேதனை தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள், தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தின.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், "சொந்த காரணங்களுக்காக இந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முகுந்தனின் இந்த விலகல், பாமகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!