| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தமிழக அரசு அதிரடி..! நகராட்சிகள் தரம் உயர்வு..! சிறப்பு நிலை நகராட்சிகளாக அறிவிப்பு..!

by Vignesh Perumal on | 2025-05-29 01:16 PM

Share:


தமிழக அரசு அதிரடி..! நகராட்சிகள் தரம் உயர்வு..! சிறப்பு நிலை நகராட்சிகளாக அறிவிப்பு..!

தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பழனி, குன்றத்தூர் உட்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் த. கார்த்திகேயன் ஆணை பிறப்பித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்த தரம் உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகராட்சிகளின் ஆண்டு வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளின் விவரம்:

சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டவை: திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி. 

தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டவை: நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம்.

முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டவை: மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம்.

தரம் உயர்வுக்கான அளவுகோல்கள்:

சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாக இருக்க வேண்டும்.

தேர்வு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும் வருவாய் இருக்க வேண்டும்.

முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ. 9 கோடி வரையிலும் வருவாய் இருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் இருக்க வேண்டும்.

மேற்கண்ட வருவாய் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தரம் உயர்வு, சம்பந்தப்பட்ட நகராட்சிகளின் வளர்ச்சிக்கும், மக்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment