பழநியில் இன்று ரோப்கார் இயங்காது..! எதுக்குன்னு தெரியுமா...?
by Vignesh Perumal on |
2025-05-29 11:46 AM
Share:
Link copied to clipboard!
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு விரைவாகவும் வசதியாகவும் சென்று வர ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ரோப்கார் நிலையத்தில் தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில், இன்று (மே 29, 2025), பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரோப்கார் சேவை ஒரு நாள் முழுவதும் நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், இன்று மலைக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மின் இழுவை ரயில் (வின்ச்) சேவையையோ அல்லது படிப்பாதையையோ பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டாலும், பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு வந்து செல்ல தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், ரோப்கார் சேவை வழக்கம் போல் மீண்டும் இயக்கப்படும்.