by Vignesh Perumal on | 2025-05-29 10:38 AM
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன், ஸ்ரீ நொண்டி ஐயா, ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மது எடுப்பு விழா இந்த ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மது எடுப்பு காப்பு கட்டுதல் நிகழ்வு, கடந்த எட்டாம் நாளன்று கோவிலில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, எட்டாம் நாள் இரவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் வகையில், கோவிலில் வந்து நள்ளிரவில் மதுவை வைத்து வழிபட்டனர்.
விழாவின் ஒன்பதாவது நாள், 'மதுக்கலைப்பு' நிகழ்வு நடைபெற்றது. இதற்காக, மகா முத்துமாரியம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, பல்லாக்கில் ஊர்வலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் பெண்களும் தங்களது நேர்த்திக்கடனாக, தலையில் மதுக்குடங்களைச் சுமந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலம், அப்பகுதியில் உள்ள முனீஸ்வரர் ஊரணியை அடைந்ததும், மது எடுப்பு சடங்கு கலைக்கப்பட்டது.
இந்த மது எடுப்பு விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். விழாவின் சிறப்பான ஏற்பாடுகள், பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.
செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!