by Vignesh Perumal on | 2025-05-27 02:57 PM
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி-1 (குரூப் 1) மற்றும் தொகுதி-4 (குரூப் 4) ஆகிய தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்காக, மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பணிக்காலியிடங்களுக்கான பயிலும் வட்டம் மூலமாக, அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தற்போது TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான மாதிரித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதிரித் தேர்வு அட்டவணை:
மே 27, 2025: (இன்று)
ஜூன் 3, 2025
ஜூன் 7, 2025
ஜூன் 24, 2025
ஜூலை 2, 2025
ஜூலை 9, 2025
இந்த மாதிரித் தேர்வுகள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்திலேயே நடைபெறும்.
எனவே, TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் அனைவரும், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து, இந்த மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகளில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார். இது மாணவர்களுக்குத் தேர்வு அணுகுமுறையை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!