by Vignesh Perumal on | 2025-05-27 02:13 PM
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாம்பட்டி பள்ளிவாசல் பிரிவு அருகே இன்று (மே 27, 2025) நடந்த இருசக்கர வாகன விபத்தில், தம்பியின் கண்முன்னே அக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்பவர் தனது சகோதரி மீனாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். விளாம்பட்டி பள்ளிவாசல் பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. விபத்தின் தீவிரத்தால், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மீனா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பி தர்மா, தனது அக்கா கண்முன்னே உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை உலுக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார், மீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது அதிவேகமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தம்பியின் கண்முன்னே அக்கா உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம், கோமணாம்பட்டி கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!