by Vignesh Perumal on | 2025-05-27 01:02 PM
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலைப் பகுதியில் இன்று (மே 27, 2025) மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை 30 அன்று வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து, சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கேரள வரலாற்றிலேயே மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், வயநாடு மாவட்டம் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவின் அனுபவம் காரணமாக, இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்க்கும் வகையில், வயநாடு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், வருவாய்த் துறையினரும் இணைந்து சூரல்மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும், பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலையோரப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவி ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!