by Vignesh Perumal on | 2025-05-26 01:21 PM
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமம், பூதப்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்தாலம்மன் கோவில் இடத்தைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, கோவில் திருவிழா மற்றும் நாடகத்தை நடத்த விடாமல் மிரட்டி வருவதாகக் கூறி, இன்று (மே 26, 2025) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மனு அளித்தனர்.
பூதமரத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில், அப்பகுதி மக்களுக்குப் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழா மற்றும் நாடக நிகழ்ச்சிகள் கிராம மக்களின் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால், தற்போது கோவில் வளாக நிலத்தைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், இதனால் திருவிழா நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் திருவிழா மற்றும் நாடகத்தை நடத்த உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள், கோவில் நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் மிரட்டி வருவதால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதற்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாரம்பரிய திருவிழாவை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் பிரதான கோரிக்கையாகும்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!