by Vignesh Perumal on | 2025-05-26 12:01 PM
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளின் பாதுகாப்பு வளைவுகளைத் தாண்டியும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்குச் செல்வது ஆபத்தானதாக மாறியுள்ளது.
நேற்று (மே 25) முதல் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ள நீர்வரத்து குறையாத நிலையில், இன்று (மே 26) இரண்டாவது நாளாகவும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அருவிப் பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்து, அருவிகளில் நீர்வரத்து சீரடைந்த பின்னரே, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!